விஜய்யை ஓவர்டேக் செய்ய மகளுக்கு மீனா ட்ரெய்னிங்..?


விஜய்யை ஓவர்டேக் செய்ய மகளுக்கு மீனா ட்ரெய்னிங்..?

தென்னிந்திய சினிமாவை கலக்கிய கண்ணழகி மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் செட்டில் ஆனார். தற்போது இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்றொரு அழகான பெண் குழந்தை உள்ளது.

அட்லி இயக்கும் தெறி படத்தில் விஜய்யுடன் இந்த குழந்தை நடித்து வருகிறது. தன் மகள் அறிமுகமாகும் முதல் படம் இது என்பதால் குழந்தையின் கூடவே இருந்து கவனித்து வருகிறார் மீனா.

நைனிகா நடிக்கவேண்டிய மறுநாள் காட்சிகளை கேட்டுக் கொண்டு அன்றைய தினம் வீட்டில் ட்ரெய்னிங் கொடுத்து வருகிறார் மீனா.

நைனிகாவும் அம்மா சொல்வதை கேட்டு சமத்தாக புரிந்துக் கொள்கிறாராம். ஷாட் ஓகே ஆனதும் அம்மாவிடம் ஓடி வந்து ஸ்வீட் கேட்டு வாங்கி சாப்பிடுகிறாராம் இந்த சுட்டி மகள்.

விட்டால் விஜய்யை ஓவர் டேக் செய்து தெறிக்க விடுவார் போலேவே இந்த நைனிகா.