பீப் பாடல் சிம்புவுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!


பீப் பாடல் சிம்புவுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!

சிம்பு பாடிய பீப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி மாதர் சங்கம் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் பல்வேறு வழக்குகள் சிம்பு மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் அவரை கைது செய்ய உள்ளனர்.

சிம்புவுக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்த சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் மட்டுமே கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது சிம்புவுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கமும் களத்தில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் டி.அருள்துமிலன் மற்றும் பொதுச்செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது

சிம்பு பாடி, அனிருத் இசையில் உருவானதாக கூறி சில விஷமிகளால் பீப்பாடல் என்ற பெயரில் இணையங்களில் ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

எனவே சிம்பு, அனிருத்துக்கு எதிராக மகளிர் குழுக்களால் ஆங்காங்கே பல கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது விஷமிகளால் வெளியிடப்பட்ட பாடல் என்ற விளக்கத்தையும் ஏற்காமல், அவர்கள் ஆண்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு எதிராக புனையப்படும்செயல்கள் மிகவும் கண்டனத்திற்குரியது. சிம்பு மற்றும் அனிருத் ஆகியோருக்கு எதிராக சட்டத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புசங்கம் வன்மையாக கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.