எம்ஜிஆர் சாங் ரீமேக்… ‘பாட்ஷா’ பன்ச்… கலக்கும் ஜி.வி. பிரகாஷ்!


எம்ஜிஆர் சாங் ரீமேக்… ‘பாட்ஷா’ பன்ச்… கலக்கும் ஜி.வி. பிரகாஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ‘2.ஓ’ படத்தை தயாரித்து வரும் அதே வேளையில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

சாம் ஆண்டன் இயக்கும் இப்படத்திற்கு ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என்ற ரஜினியின் சூப்பர் ஹிட் பாட்ஷா பன்ச் டயலாக்கை வைத்துள்ளனர். ஜிவி பிரகாஷ் படம் என்றால் விடிவி கணேஷ் இல்லாமல் இருப்பாரா? அவரும் இருக்கிறார். அவர் ஜி.வி. பிரகாஷின் தந்தையாக நடிக்க, தாயாக நிரோஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தி, கருணாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாயகனே படத்திற்கு இசையமைக்கிறார்.

இதில் ஜி.வி. பிரகாஷ்க்கு அறிமுகப் பாடல் ஒன்று இருக்கிறதாம். அப்பாடல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்…’ என்ற பாடலின் ரீமேக்காக இடம் பெற போகிறது.

கவிஞர் நா.முத்துக்குமார் இப்பாடலின் சில வரிகளை இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப மாற்றவிருக்கிறாராம். நடனம் பாபா ஷங்கர்.