ஷாரூக்கான் இன்று செய்வதை எம்ஜிஆர் அன்றே செய்துவிட்டார்!


ஷாரூக்கான் இன்று செய்வதை எம்ஜிஆர் அன்றே செய்துவிட்டார்!

‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்… அது முடிந்தப் பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என் பாடி அசத்தியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் கடமையை குறிப்பிட்டு சொன்னாலும் அவரது பெயர் மூன்று எழுத்தில் இருப்பதால் அவ்வாறே ரசிகர்களால் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் தமிழக மக்களின் இதயங்களில் மறையாது வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 1968ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் நடித்த ‘தேர்த்திருவிழா’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்திருந்தார். அதில் அவரே நடிகராகவும் அவருக்கு அவரே ரசிகராகவும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பலகாட்சிகளில் தான் ஒரு எம்ஜிஆர் ரசிகர் என்று அவரே கூறுவதாக காட்சிகள் இருக்கும்.

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 50 வருடங்களை கடந்து விட்டது. ஆனால் இப்படத்தை போன்ற ஒரு படம் பாலிவுட்டில் தயாராகியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஃபேன்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் ஷாருக்கான் இருவேடங்களில் நடித்துள்ளார். அவரும் அவருக்கு ரசிகராக அவரே நடித்துள்ளதால் இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இதை நம் புரட்சித்தலைவர் 50 வருடங்களுக்கு முன்பே செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ஷாரூக்கானின் ‘ஃபேன்’ (FAN) படம் விரைவில் வெளியாகவுள்ளது.