விஷால் கார்த்தி உடலில் புகுந்த எம்ஜிஆர் ஆவி!


விஷால் கார்த்தி உடலில் புகுந்த எம்ஜிஆர் ஆவி!

நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால் மோதிக்கொள்ளும் இரு அணிகளும் பலத்த பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, தேனாம்பேட்டையில், எஸ்.எஸ்.ஆர். நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்.எஸ்.ஆரின் மகன்கள் ராஜேந்திரகுமார், செல்வராஜ், விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறைந்த எஸ்.எஸ்.ஆர்., உருவப்படத்தை ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் விஷால் பேசியதாவது…

“பள்ளி, கல்லுாரிகளில், சொல்லித் தராத பாடங்களை நமது மூத்த கலைஞர்கள் நமக்கெல்லாம் சொல்லி கொடுத்துள்ளனர். எனவே மூத்தவர்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும். நாங்களும் கற்க காத்திருக்கிறோம்.

நாங்கள் திடீரென சாமி ஆடுகிறோம் என்கின்றனர் சிலர். ஆமாம் கார்த்தி, நாசர் மற்றும் என்னுள் எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர் ஆகியோர்களின் ஆவி உள்ளே புகுந்துள்ளது. அவர்களை போலவே நாங்களும் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடத்தை உருவாக்குவோம்” என்றார்.