நள்ளிரவில் தூக்கத்தை கெடுக்க வரும் ‘ஓ காதல் கண்மணி’


நள்ளிரவில் தூக்கத்தை கெடுக்க வரும் ‘ஓ காதல் கண்மணி’

‘ரோஜா’ படத்தில் துவங்கிய மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி தற்போதும் கலக்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் படம் வந்தாலே ரசிகர்களுக்கு குஷிதான். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களும் இணைந்திருப்பதால் ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு நிறைய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள மன… மன… மெண்டல் மனதில் பாடல் மற்றும் டீசர்கள் யூடியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்க வருகிறது ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பாடல்கள். பெரிய விழா எதுவும் இல்லாமல் இணையம் மூலமாக இந்தப் படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் புத்தாண்டு நள்ளிரவில் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அப்படம் மிகப் பெரிய பெயரை பெற்றுத் தந்தது. இந்நிலையில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பாடல்களும் நள்ளிரவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.