விஜய்யுடன் நடிப்பது குறித்து மியா ஜார்ஜ் என்ன சொல்கிறார்..?


விஜய்யுடன் நடிப்பது குறித்து மியா ஜார்ஜ் என்ன சொல்கிறார்..?

அட்லி இயக்கி வரும் ‘தெறி’ படத்தை தொடர்ந்து பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில் விஜய்யுடன் காஜல் அகர்வால், காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ், மம்மூட்டி, விஜய்யின் தங்கையாக மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இத்தகவலை நடிகை மியா ஜார்ஜ் மறுத்துள்ளார். “சமூக வலைத்தளத்தில் நான் எந்த கணக்கும் வைத்துக் கொள்ளவில்லை. விஜய்யுடன் நான் நடிக்கவுள்ளதாக வந்துள்ள தகவல்களில் உண்மையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஹ்ம்… அடுத்து யாரிடமிருந்து இதுபோன்ற தகவல் வரப்போகிறதோ?