விஜய்க்கு பதிலாக சிவகார்த்திகேயன்… மோகன் ராஜா திடீர் முடிவு..!


விஜய்க்கு பதிலாக சிவகார்த்திகேயன்… மோகன் ராஜா திடீர் முடிவு..!

ரீமேக் படங்களை மட்டுமே இயக்கிய ஜெயம் ராஜாவின் ‘தனி ஒருவன்’ படத்தின் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்திருக்கின்றனர்.

விஜய் இவரது படத்தில் நடிக்கக்கூடும் என்ற தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் விஜய், இயக்குனர் பரதனுக்கு தன் அடுத்த படத்தின் வாய்ப்பை கொடுத்துவிட்டார்.

இதனால் விஜய்க்கு தயாராக வைத்திருந்த கதையை மோகன் ராஜா தற்போது சிவகார்த்திகேயன் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார். கதையை கேட்ட சிவகார்த்திகேயனும் டபுள் ஓகே சொல்ல தற்போது புதிய பட அறிவிப்பு உறுதியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் மேனேஜரும் நெருங்கிய நண்பருமான ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான 24 எ எம் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ள இப்புதிய படத்தை மோகன் ராஜா இயக்கவிருக்கிறார்.

தற்போது இந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் மீண்டும் இதே நிறுவனத்திற்காக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பணியாற்றவுள்ள மற்ற கலைஞர்கள் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.