சிவகார்த்திகேயன் கதையை பஹத்திடம் சொன்ன மோகன் ராஜா..!


சிவகார்த்திகேயன் கதையை பஹத்திடம் சொன்ன மோகன் ராஜா..!

ரீமேக்குகளின் ராஜா என்ற அவப்பெயரை மாற்றி, இன்று ‘தனி ஒருவனாக’ உயர்ந்து நிற்கிறார் மோகன் ராஜா.

தனி ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் நஸ்ரியாவின் கணவரும் மலையாள சினிமாவின் பிரபல நடிகருமான பஹத் பாசில் நடிக்கிறார்.

இப்படத்தை ஆர் டி ராஜா தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து பேச பஹத் பாசிலை சந்தித்துத்துள்ளார் மோகன் ராஜா.

படத்தில் பஹத்தின் கேரக்டர் குறித்தும் விவாதித்துள்ளனர்.

தற்போது இவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தன் ட்விட்டரில் பகிர்ந்து, “தமிழ் சினிமாவுக்கு வருகை தரும் பஹத்தை வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.