விஜய் வழியில் கேரளாவை வளைக்க திட்டமிடும் அஜித்..!


விஜய் வழியில் கேரளாவை வளைக்க திட்டமிடும் அஜித்..!

தமிழில் வெளியாகும் நேரடி படம் என்றாலும், ஆந்திராவையும் கேரளாவையும் குறிவைத்தே படங்கள் உருவாகின்றன.

அந்தந்த மாநில முன்னணி நட்சத்திரங்களை படங்களில் சேர்த்து விடுகின்றனர்.

கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், ஜில்லாவில் மோகன்லாலை கொண்டுவந்தனர். மேலும் தெறி படத்தில் விஜய் மலையாளம் பேசி நடித்தார்.

விஜய்யின் இந்த டெக்னிக்கை தொடர்ந்து, அஜித்தும் இவ்வழியில் கேரளா ரசிகர்கள் கவர வழி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இதனைத் தொடர்ந்து, விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பே தீனா படத்தில் சுரேஷ் கோபியுடனும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மம்மூட்டியுடனும் நடித்தவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.