ரஜினி தயாரிப்பில் மோகன்லால்-கௌதமி இணைந்த படம்..!


ரஜினி தயாரிப்பில் மோகன்லால்-கௌதமி இணைந்த படம்..!

மலையாளத்தில் ராசியான ஜோடி என்று போற்றப்பட்ட மோகன்லால்-கவுதமி ஜோடி மீண்டும் தற்போது தெலுங்கு படத்திற்காக இணைந்துள்ளனர்.

‘மனமன்தா’ என்று தெலுங்கில் பெயரிடப்பட்ட இப்படத்தை தமிழில் ‘நமது’ என்ற பெயரில் வெளியிடவுள்ளனர்.

மலையாளத்தில் ‘விஷ்மயம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த ஜோடியுடன் விஸ்வநாத்-ஹனிஷா ஆம்ரோஷ் என்ற இளம் ஜோடியும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதிராவ், எஸ்பி பாலசுப்ரமணியம், நெடுமுடி வேனு, ஜாய் மேத்யூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்திரசேகர் ஏலட்டி இயக்கி வரும் இப்படத்தின் பாடல்களை மதன்கார்க்கி எழுதியுள்ளார். இசை மகேஷ் சங்கர்

இப்படத்தை ரஜினி கோரப்பட்டி மற்றும் சாய் கோரப்பட்டி ஆகிய இருவரும் வாராஹி சலன சித்திரம் சார்பாக தயாரித்து வெளியிடவுள்ளனர்.

Related