அடுத்த தல-தளபதி..? முட்டி மோதும் மம்மூட்டி-மோகன்லால் ரசிகர்கள்..!


அடுத்த தல-தளபதி..? முட்டி மோதும் மம்மூட்டி-மோகன்லால் ரசிகர்கள்..!

தமிழகத்தில் சினிமா ரசிகர்களிடையே தல? தளபதி? என்ற கடும் போட்டி வெகுநாட்களாக இருந்து வருகிறது.

இதில் ஒரு நடிகரின் படம் பற்றிய ஏதாவது ஒன்று வெளியானால் மற்ற நடிகரின் ரசிகர்கள் அதை கிண்டல் செய்வதையே வேலையாக வைத்துள்ளனர்.

தற்போது இந்த கலாச்சாரம் கேரளாவிலும் பரவி வருகிறது.

மம்மூட்டியின் ‘கசாபா’ மற்றும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’ ஆகிய இரண்டு படங்களும் ஜூலை-7ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் ‘கசாபா’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த டிசைனில் ஒரு ஜீப்பின் பம்பரில் உட்கார்ந்தபடி மம்மூட்டி போஸ் கொடுத்திருந்தார்.

தன் இரண்டு கைகளையும் பானெட்டின் மீது வைத்து கம்பீரமாக இருந்தார். இதை வைத்து பலவிதமான மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர் லால் ஏட்டன் ரசிகர்கள்.

இதற்குமுன்பு புலி முருகன் டீசர் வெளியானபோதும் இதுபோல் மம்மூட்டி ரசிகர்கள் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.