‘புலிமுருகன்’ படத்தில் ஸ்லிம் நமீதா!


‘புலிமுருகன்’ படத்தில் ஸ்லிம் நமீதா!

கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் படங்கள் இரண்டு… ஒன்று விஜய்யின் ‘புலி’ மற்றொன்று சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’. அதுவும் தற்போது வெளியீடுக்கு தயாராகியுள்ள நிலையில் இப்படங்கள் பற்றிய பேச்சு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் இந்த இருபடங்களின் தலைப்பை இணைத்து ஒரு புதிய படத்திற்கு ‘புலிமுருகன்’ என பெயரிட்டுள்ளனர்.

ஆனால் அது தமிழ் படமல்ல. ஒரு மலையாளப் படம். ஆனால் அதில் நடிப்பவர் நம் நமீதாதான். இவரின் உடல் எடை கடந்த சில காலமாக மிகவும் கூடிக்கொண்டே போனது. எனவே படங்களில் வாய்ப்புகள் குறைந்து போனது. தற்போது உடல் எடையில் 20 கிலோவை குறைத்துக் கொண்டு ஸ்லிம்மாக தரிசனம் தருகிறார் இவர். விடுவார்களா நம் கோலிவுட்காரர்கள் நமீதாவிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். ஆனால் மல்லுவுட்காரர்களோ உடனே நமீதாவை புக்கிங்கும் செய்துவிட்டனர்.

இந்நிலையில் மோகன்லால் நடிக்கும் ‘புலிமுருகன்’ படத்தில் முதன் முதலான அவருடன் இணைகிறார் நமீதா. இவர்களுடன் கமாலினி முகர்ஜி, கிஷோர், பாலா, சுராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மம்மூட்டி, ப்ரித்விராஜ் நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தை இயக்கிய வைஷாக் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அடுத்த வருடம் இப்படத்தை வெளியிடவுள்ளனர்.