பத்தாம் தேதி பர்ஸ்ட் லுக்… பரபரப்பில் ராகவா லாரன்ஸ்..!


பத்தாம் தேதி பர்ஸ்ட் லுக்… பரபரப்பில் ராகவா லாரன்ஸ்..!

இயக்குனர், நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பரபரப்பாக சினிமா சார்ந்த துறைகளில் இயங்கி வருகிறார்.

இவையில்லாமல் சமூக சேவை, அறக்கட்டளை பணிகள், ஸ்ரீராகவேந்திரர் பிறந்தநாள் விழா என மற்ற பணிகளிலும் மனிதர் படுபிஸியாக இருக்கிறார்.

வருகிற மார்ச் 10ஆம் தேதி, ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினத்தில் தான் நடித்து வரும் “மொட்ட சிவா கெட்ட சிவா“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவிருக்கிறார் லாரன்ஸ்.

இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடித்து வருகிறார்.

அம்ரீஷ் இசையமைக்க, சாய்ரமணி இயக்கி வரும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வருகிறார். வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறார்.