பெண்களுக்கு தள்ளுபடி! ஆண்களுக்கு ரூ. 1000 டிக்கெட். தியேட்டர் நிர்வாகம் புது முடிவு!


பெண்களுக்கு தள்ளுபடி! ஆண்களுக்கு ரூ. 1000 டிக்கெட். தியேட்டர் நிர்வாகம் புது முடிவு!

திருட்டு வி.சி.டி. களை ஒழிக்கவும், தியேட்டர்களில் கூட்டம் குறைந்து வருவதாலும், அதிக அளவில் ரசிகர்களை கவரவும் திரையரங்கு உரிமையாளர்கள் பலர் யோசித்து வருகின்றனர். இதற்கு முன்னுதாரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சண்முகா திரையரங்க நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி ரூ.1000 கொடுத்து டிக்கெட் வாங்கினால், ஒரு வருடம் முழுவதும் அந்த தியேட்டரில் வெளியாகும் 40 படங்களை ஒரு முறை பார்க்கலாம் என்பதுதான். ஒருவேளை உங்களால் ஏதாவது ஒரு படத்தை பார்க்க முடியவில்லை என்றால் அந்த டிக்கெட்டை உங்களுக்கு தெரிந்தவரிடம் அல்லது வேறு ஒரு நபரிடம் கொடுத்து அந்தப் படத்தை ஒருமுறை மட்டும் பார்க்க சொல்லலாம்.

இந்தப் புதிய திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது என்றாலும் இதுவரை 2000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாம். இத்திட்டத்தினால் கிடைக்கும் தொகையிலிருந்து புதிய படங்களை வாங்கி திரையிடவும் தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

இப்புதிய திட்டத்தைப் போல வேறு ஒரு திட்டம் மதுரை மாவட்டத்தில் உள்ள தியேட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மக்களை கவர புதுப்புது திட்டங்கள் ரெடி. திருட்டு விசிடியை மீறி தியேட்டருக்கு மக்கள் வருவார்களா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.