என் பேஸ்மெண்ட் ரொம்ப வீக் – ‘உறுமீன்’ பாபி சிம்ஹா


என் பேஸ்மெண்ட் ரொம்ப வீக் – ‘உறுமீன்’ பாபி சிம்ஹா

‘ஓடுமீன் ஓட, உறுமீன் வருமளவு வாடி இருக்குமாம் கொக்கு…’என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். நின்ற இடத்திலிருந்தே மீனை வேட்டையாடும் கொக்குக்கும் மீனுக்கும் இருக்கும் போராட்டத்தை மையமாக கொண்ட ஒரு கதையை படமாக்கி வருகிறார்கள். இந்த தொடரில் இடம் பெற்றுள்ள ‘உறுமீன்’ வார்த்தைதான் பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.

இப்படத்தில் பாபிசிம்ஹாவுடன் மெட்ராஸ், மதயானைக் கூட்டம் படத்தில் நடித்த கலையரசன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் ரேஷ்மி மேனன், சான்ட்ரா,  அப்புக்குட்டி மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர். ரவிந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய படத்தை இயக்குகிறார் சக்திவேல் பெருமாள்சாமி.

‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ தயாரிக்கும் ‘உறுமீன்’ டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில்  நடைபெற்றது. விழாவில் பங்குபெற்ற நாயகன் பாபி சிம்ஹா பேசும் போது…

“என்னுடன் நாயகியாக நடித்திருப்பவர் தங்களுக்கு நன்கு அறிமுகமான ரேஷ்மி மேனன் தான். (ஆரம்பத்தில் லஷ்மிமேனன்தான் என்று தவறுதலாக குறிப்பிட்டார்) ஆரம்பத்தில் அவருடன் நடிக்க மிகவும் தயக்கமாக இருந்தது. என் கை கால்களில் நடுக்கத்தை பார்த்தவர் என் கூச்சத்தை போக்கினார். ஒரு கோ ஆர்ட்டிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்” என்று வெளிப்படையாக பேசினார்.