‘ரஜினியுடன் நடிப்பதே என் அதிகபட்ச ஆசை’ – கீர்த்தி!


‘ரஜினியுடன் நடிப்பதே என் அதிகபட்ச ஆசை’ – கீர்த்தி!

‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் மேனகா. இவரின் மகள் கீர்த்தி என்பவரும் நடிகை. இவரின் தமிழ் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் இவர் முன்னணி நடிகையாக முன்னேறி கொண்டிருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா? அட! இவர் ஒப்பந்தம் செய்துள்ள படவரிசையை பார்த்தால் நீங்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வீர்கள்.

சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினிமுருகன்’, விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, பாபி சிம்ஹாவுடன் ‘பாம்புச்சட்டை’ , தனுஷுடன் பிரபுசாலமனின் புதிய படம் என வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன. (என்ன சரிதானே…!)

கீர்த்தி நடித்து ‘ரஜினிமுருகன்’ படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில் கூறியதாவது…

“என் அப்பா சுரேஷ் தயாரிப்பாளர். அம்மா நடிகை மேனகா. அக்கா ரேவதி காட்சித் தொடர்பியல் படித்திருக்கிறார். இவர்கள் மூவரும் சினிமா அகாடமியை நடத்தி வருகிறார்கள். நான் நடிக்க வந்துவிட்டேன். என் அம்மாவின் தாய்மொழி தமிழ் என்பதால் நானும் என்னை ஒரு தமிழ் பெண்ணாகவே உணர்கிறேன்.

என் அம்மா ரஜினி சாருடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்தவர். இப்போதும் அப்பட அனுபவம் குறித்து கூறிக்கொண்டே இருப்பார். ரஜினி சார் அன்றும் இன்றும் எந்த ஈகோவும் இல்லாத எளிமையான மனிதர் என்பார். எனக்கும் ரஜினி சாருடன் ஏதாவது ஒரு காட்சியில் நடித்திட ஆசை. என் சினிமா வாழ்க்கையில் இதுதான் அதிகபட்ச ஆசை. என் முதல் படமே ‘ரஜினிமுருகன்’ என்ற பெயரில் வெளிவருவதை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.