அஞ்சாதே 2… தீவிர ஆலோசனையில் மிஷ்கின்..!


அஞ்சாதே 2… தீவிர ஆலோசனையில் மிஷ்கின்..!

கடந்த 2008 ஆம் ஆண்டு நரேன், அஜ்மல், பிரசன்னா, விஜயலட்சுமி நடித்து வெளியான படம் ‘அஞ்சாதே’. இப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இப்படம் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுத் தந்தது.

நேமி சந்த் மற்றும் ஹித்தேஷ் ஜப்பக் தயாரித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த ஆலோசனையில் இருக்கிறாராம் மிஷ்கின். தற்போது நடித்து வரும் ‘சவரக்கத்தி’ படத்தை தொடர்ந்து அவர் இப்படத்தை இயக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.