மிஷ்கின் படத்தில் மிரட்டப் போகும் ‘சிக்ஸ் பேக்’ சரத்குமார்


மிஷ்கின் படத்தில் மிரட்டப் போகும் ‘சிக்ஸ் பேக்’ சரத்குமார்

இயக்குனர் பாலா தயாரித்து மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ‘பிசாசு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.  அதன் பின்னர் எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் ‘பிசாசு’ போல உலாவி கொண்டு இருந்தது.

‘ஐ’ மற்றும் ‘சண்டமாருதம்’ படத்தை தொடர்ந்து, சரத்குமார் நடிக்கவுள்ள படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

இதில் சிக்ஸ்பேக் வைத்து ரசிகர்களை மிரட்ட போகிறாராம் சரத்குமார். இவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

இப்படம் முடிந்தவுடன் மீண்டும் ‘சண்டமாருதம்’ படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் படத்திலும் சரத்குமார் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.