நதியா, சமந்தா, ‘பிரேமம்’ அனுபமா கூட்டணியில் ‘அ-ஆ’..!


நதியா, சமந்தா, ‘பிரேமம்’ அனுபமா கூட்டணியில் ‘அ-ஆ’..!

முன்னாள் நாயகி நதியாவுடன் இன்றைய முன்னணி நாயகி சமந்தா நடிக்கும் படம் அ.ஆ. இதில் இருவரும் அம்மா-மகளாக நடித்துள்ளனர். நிதின் நாயகனாக நடித்துள்ளார்.

அனுஷ்யா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹரி என்ற தலைப்பை சுருக்கிதான் அ.ஆ என அழைக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் இப்படத்தில் சமந்தாவின் அப்பாக நரேஷ் நடிக்கிறார். ராதா கிருஷ்ணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

முக்கிய வேடத்தில் பிரேமம் நாயகி அனுபமா பரமேஷ்வரன், அனன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிக்கி ஜே மேயர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மே 6 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.