நடிகர் சங்கம்… ரஜினி, கமல், சூர்யா, கார்த்தியின் பங்கு என்ன..?


நடிகர் சங்கம்… ரஜினி, கமல், சூர்யா, கார்த்தியின் பங்கு என்ன..?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பதவியேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இக்கூட்டத்தில் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் சிவகுமார், சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, விமல், மயில்சாமி , விஷ்ணு, வடிவேலு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் வரவில்லை. மேலும் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் உள்ள முக்கிய நிகழ்வுகள்..

நடிகர் கமல்ஹாசன் ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். “தனியாரிடம் இருந்து சங்கம் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து நடிகர்களும் நடித்து, ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாடகத்தை அரங்கேற்ற செய்யவிருக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.

இவையில்லாமல் முன்னணி நடிகர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

மேலும், நடிகர் சங்கம் கட்டிடம் ரூ. 26 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதற்கான நிதி திரட்டும் நிகழ்வாக ஏப்ரல் 17ஆம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியை நேரடியாக ஒளிப்பரப்புவதற்கான டிவி உரிமை ரூ.9 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

நடிகர் சங்கக் கட்டிடம் மூலமாக ஆண்டுக்கு ரூ.6 கோடி வருமானம் வரும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் முதற்கட்டமாக நடிகர் சங்க கட்டிடத்தில் ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம் மற்றும் இரண்டு திருமண மண்டபங்கள், சங்க அலுவலகம், உடற்பயிற்சிக் கூடம், நடனப் பயிற்சிக்கான அரங்கம் ஆகியவைகள் இக்கட்டிடத்தில் இடம்பெறவிருக்கிறதாம்.

மேலும் இதில் இடம் பெறவுள்ள ப்ரிவியூ தியேட்டரை நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி, தங்கள் சொந்த செலவில் கட்டித் தர வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related