சரத்குமார்-ராதாரவி மீது பொருளாதார குற்ற நடவடிக்கை??


சரத்குமார்-ராதாரவி மீது பொருளாதார குற்ற  நடவடிக்கை??

சென்னை தி. நகரில் தென்னிந்திய நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் திடீரென நேற்று மாலை நடைபெற்றது. 2011ம் ஆண்டுக்கு பிறகு நடிகர் சங்க வளாகத்திலேயே செயற்குழு கூட்டம் கூடியது. இக் கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றிய சங்க நிர்வாகிகள் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்ததாவது… “நடிகர் சங்கத் தேர்தல் முடிவடைந்து புதிய அணி பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை நடிகர் சங்க கணக்குகளை பதவி வகித்த சரத்குமாரும் ராதாரவியும் முறையாக ஒப்படைக்கவில்லை.

அவர்களுக்கு நாங்கள் அளித்திருந்த மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்துவிட்டது. எனவே, அவர்கள் கணக்குகளை ஒப்படைக்காததால், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் மீது புகார் அளிக்க இருக்கிறோம்.
தற்போது அதற்கான ஆடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதை முடித்துவிட்டு முறையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம். இதனிடையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம்” என தெரிவித்தனர்.