ஸ்டார் கிரிக்கெட்… உங்க ஹீரோ எந்த டீமுக்கு கேப்டன்..?


ஸ்டார் கிரிக்கெட்… உங்க ஹீரோ எந்த டீமுக்கு கேப்டன்..?

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட, சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி ஏப்ரல் 17ஆம் தேதி நடக்கிறது.

இதற்காக எட்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை முன்பே பார்த்தோம். தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களின் பெயரில் இந்த அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியின் விளம்பர தூதர்களாக நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த அணிகளின் பெயர்களும் அணியின் கேப்டன்களின் பெயரும் கீழே கொடுக்கப்பட்டள்ளது.

  • சென்னை சிங்கம்ஸ் – சூர்யா
  •  மதுரை காளைஸ் – விஷால்
  •  கோவை கிங்ஸ் – கார்த்தி
  • நெல்லை டிராகன்ஸ் – ஜெயம் ரவி
  • திருச்சி டைகர்ஸ் – சிவகார்த்திகேயன்
  • ராம்நாட் ரைனோஸ் – விஜய் சேதுபதி
  • தஞ்சை வாரியர்ஸ் – ஜீவா
  • சேலம் சீட்டாஸ் – ஆர்யா

இந்நிகழ்ச்சியை ஒளிப்பரப்பும் உரிமையை சன் டிவி 9 கோடி ரூபாய் கொடுத்து பெற்றுள்ளதாம்.

ரஜினி, கமல், அமிதாப், விஜய் மற்றும் கேரள, தெலுங்கு திரையுலக பிரபலங்கள் நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

அஜித் இப்போட்டியை புறக்கணிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.