விஜய்-உதயநிதிக்காக அதிரடி ஆக்ஷனில் இறங்கிய விஷால்..!


விஜய்-உதயநிதிக்காக அதிரடி ஆக்ஷனில் இறங்கிய விஷால்..!

ஓரிரு தினங்களுக்கு முன், பெங்களூரில் இருந்து சென்னை வந்த தனியார் பஸ்ஸில் தெறி படம் திரையிடப்பட்டது.

இதில் பயணம் செய்த பயணி ஒருவர், விஷாலிடம் இதை தெரிவித்தார்.

உடனே விஷால், திருட்டு விசிடி தடுப்பு சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் புகார் கொடுத்தார்.

அதன்படி மதுரவாயில் அருகே அந்த பேருந்தை மடக்கிப் பிடித்து அந்த பேருந்து ஓட்டுனரை கைது செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று இரவு அவினாசியில் இருந்து சென்னைக்கு வந்த CJS – BSS வண்டி எண் TN37AH7997 என்ற தனியார் பஸ்ஸில் உதயநிதி நடித்த ‘மனிதன்’ ஒளிப்பரப்பானது.

இதனையும் ஒரு பயணி, விஷாலிடம் தெரிவிக்க உடனடி ஆக்ஷனில் இறங்கிய விஷால் புகார் செய்துள்ளார்.

எனவே அந்த பேருந்தின் ஓட்டுனரை அயனாவரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.