“பழிவாங்கும் நடவடிக்கையாக மாறிவிடுமோ எனப் பயந்தோம்!” நடிகர் சங்க நிலை??


“பழிவாங்கும் நடவடிக்கையாக மாறிவிடுமோ எனப் பயந்தோம்!” நடிகர் சங்க நிலை??

நடிகர் சிம்பு பாடிய பீப் பாடலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுநாள் வரை நடிகர் சங்க தலைவரோ அல்லது நிர்வாகிகளோ இதுபற்றி வாய் திறக்கவில்லை.

தற்போது முதன்முறையாக இதுகுறித்து நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில்…

“இணையத்தில் வெளியான பாடல் முறையாக வெளியிடப்பட்டதா? கசிந்ததா? என்ற சந்தேகம் தீராத நிலையில், பீப் பாடல் பெண்களை இழிவுபடுத்தி இருப்பதால் நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

இது போன்ற சம்பவங்கள் விமர்சனங்களை சந்திக்கும்போது மக்களின் உணர்வை மதித்து கலைஞர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும் கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமல் வெள்ள நிவாரணப் பணிகளில் நடிகர் சங்கம் ஈடுபட்டு வருகிறது. மேலும் நாங்கள் உடனடியாக ஏதேனும் கருத்து தெரிவித்திருந்தால், கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சிம்பு எங்களை எதிர்த்து போட்டியிட்டதால் நாங்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக செய்கிறோம் என்ற விமர்சனம் எழுந்திருக்கும்.

தற்போது இவ்விவகாரம் மக்கள் மன்றம் மற்றும் நீதி மன்றம் வரை சென்றுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட கலைஞர்கள் இதிலிருந்து விடுப்பட்டு புதுப்பொலிவோடு மீண்டும் கலைப்பணி ஆற்ற வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இந்த பீப் பாடல் எல்லா கலைஞர்களுக்குமே ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. இனி இதுபோன்ற ஒரு சங்கடமான சூழல் உருவாகக் கூடாது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.