மோதலுக்கு தயாராகும் விஜய்-அஜித் அணிகள்..?


மோதலுக்கு தயாராகும் விஜய்-அஜித் அணிகள்..?

நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் நடிகர் சங்கத்தில் பதவியேற்ற பின் ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகின்றனர்.

இதில் முதற்கட்டமாக நடிகர் சங்க நிலத்தை ரூ. 2.5 கோடி கொடுத்து, எஸ்பிஐ சினிமாஸ் இடம் இருந்து மீட்டெடுத்தனர். இதனிடையில் சங்க உறுப்பினர்களின் கணக்கெடுப்பு பணிகளை துவங்கினர்.

தங்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட ஆயுத்தமாகி வருகின்றனர். இதற்காக மார்ச் 20ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டவுள்ளனர்.

மேலும் ஏப்ரல் 10ஆம் தேதி நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றையும் நடத்தவிருக்கின்றனர். அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் அணிகளுக்கு விஜய் மற்றும் அஜித் அணி என பெயரிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஒருவேளை இப்படியாக அணிகள் பிரிக்கப்பட்டால், அது நடிகர்களுக்கும் மட்டுமில்லை ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தானே.