1 லட்சம் திருட்டு டிவிடி பறிமுதல்… அதிரடி வேட்டையில் ரமணா-நந்தா..!


1 லட்சம் திருட்டு டிவிடி பறிமுதல்… அதிரடி வேட்டையில் ரமணா-நந்தா..!

சில நாட்களுக்கு முன் தெறி மற்றும் மனிதன் படங்கள் திருட்டுத்தனமாக பேருந்தில் திரையிடப்பட்டது.

இதனையறிந்த விஷால், புகார் கொடுக்கவே, அந்த பேருந்தின் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது அடுத்த வேட்டையிலும் இறங்கியுள்ளார் விஷால்.

இவர் கொடுத்த புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார் சோதனையிட்டு 1 லட்சம் டி.வி.டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள கம்யூட்டர்களும் புதிய படங்களின் டிவிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராம்சந்த லால் ​சேட்டு என்பவருடைய குடோனில் 20 பேர் திருட்டுத்தனமாக டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிருந்தான் தர்மபுரி, சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்துக்கு டிவிடிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறதாம்.

நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் நேரிடையாக சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள திருட்டு டிவிடிகளை பறிமுதல் செய்துள்ளனர்.