நடிகர் சங்கத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது!


நடிகர் சங்கத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது!

மிகுந்த பரபரப்புகளுக்கிடையே நடிகர் சங்கத் தேர்தலுக்காக தமிழ் சினிமா நடிகர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் விஷால், கார்த்தி, கருணாஸ், நாசர், பொன்வண்ணன் ஆகியோரை கொண்ட ‘பாண்டவர் அணி’ ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆனால் தேர்தல் தொடர்பாக இவர்களை சந்திக்க அஜித் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை போல் நடிகர் சரத்குமார் அணியினரும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் ரஜினியை இது தொடர்பாக சரத்குமார் சந்தித்தது நாம் அறிந்ததே. இதனிடையில் விஷால் அணியினர் தொடர்ந்த வழக்கால் இதுநாள் வரை தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த வழக்கிற்கு ஆணையராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நடிகர் சங்கத் தேர்தல் தேதியை இன்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது… தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 18–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். சென்னை, மயிலாப்பூர் செயிண்ட் எபாக்ஸ் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இத்தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் வாக்களிக்க 3,139 பேர் மட்டுமே தகுதி பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.