‘அப்பாடா… எல்லா கடனையும் அடைச்சுட்டோம்….’ விஷால் பெருமிதம்..!


‘அப்பாடா… எல்லா கடனையும் அடைச்சுட்டோம்….’ விஷால் பெருமிதம்..!

நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பதவியேற்றது முதல் சங்க கட்டிடத்திற்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இதனிடையில், எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்திடம் பேசி, கடன் வாங்கி நிலத்தை மீட்டனர்.

அண்மையில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் வந்த வருவாயை வைத்து தற்போது சங்க கடனை அடைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

“ஐசரி கணேஷ் சாரிடமிருந்து பெற்ற ரூ.2 கோடி கடனை அடைத்து விட்டோம். அவர் சங்கத்திற்கு ரூ.9 லட்சத்தை கொடுக்க முன்வந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக டிரஸ்ட் அக்கவுண்டில் ரூ.8 கோடி தொகை உள்ளது. சங்கத்தின் நிலம் கடனின்றி திரும்பக் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.