எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நடிகர் சங்கம்..!


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நடிகர் சங்கம்..!

நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

எனவே இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் விஷால்.

அப்போது அவர் தெரிவித்தாவது… ‘மறைந்த பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் இரண்டு மாணவர்களின் கல்விச் செலவை நடிகர் சங்கம் ஏற்றுக் கொள்ள முடிவுசெய்துள்ளது.

மேலும் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாட நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது” என விஷால் தெரிவித்தார்.

சிலநாட்களுக்கு முன்பு நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை அழைக்கவுள்ளோம் என விஷால் தெரிவித்து இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.