‘காவிரி பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாது’ – விஷால் விளக்கம்!


‘காவிரி பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாது’ – விஷால் விளக்கம்!

கடந்த மாதம் மிகவும் பரபரப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் அணி அமோக வெற்றி பெற்றது. எனவே இவ்வணியைச் சேர்ந்த நாசர் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளும் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த அணி சில தீர்மானங்களை அறிவித்தது. அப்போது தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான காவிரி நதி பிரச்சினை குறித்து கேட்டபோது… “அதில் நடிகர் சங்கம் தலையிடாது” என கூறியிருந்தார் விஷால். இந்நிலையில் மீண்டும் தன் சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார். தற்போது கூறியதாவது…

“காவிரி பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிடாது என்று நாங்கள் கூறியதால் ஏதோ உணர்வு இல்லாத விஷயமாக நீங்கள் கருதக்கூடாது. காவிரி பிரச்னை என்பது அரசு சார்ந்த அரசியல் பிரச்சினை. அதில் நடிகர் சங்கம் தலையிடக்கூடாது. இந்த பெரிய பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடுவது முறையல்ல. அதற்கு அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அரசாங்கம் இருக்கிறது. இது அவர்களின் வேலை” என விளக்கமளித்துள்ளார் விஷால்.