வசமாகச் சிக்கிய தேவயானி தம்பி! திடீர் நிச்சயம் ஏன்??


வசமாகச் சிக்கிய தேவயானி தம்பி! திடீர் நிச்சயம் ஏன்??

ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் ஐந்து நாயகர்களில் குண்டுப் பையனாக அறிமுகமான நகுல், நடிகை தேவயானியின் தம்பியும் கூட.
இப்படத்தை தொடர்ந்து ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘கந்தக்கோட்டை’, ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது ப்ரேம்ஜியுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘நாரதன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

திடீரென நகுலுக்கும் சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண் ஸ்ருதி பாஸ்கருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மணப்பெண் ஸ்ருதி நட்சத்திர ஓட்டலில் சமையல் கலை நிபுணராக பணிபுரிந்தவர் என்பது கூடுதல் தகவல்.

இதுகுறித்து நகுல் கூறியிருப்பது… “நண்பர்களே, ஸ்ருதி பாஸ்கருடன் என்னுடைய திருமண நிச்சயத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் ஆசியை வேண்டுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுனைனாவுடனும், சுப்ரமணியபுரம் சுவாதி போன்றோருடனும் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். அதனால் சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நகுல், “அந்த கிசுகிசுவெல்லாம் பொய் என்றும், தான் ஒரு பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் அவரை மணக்க பெற்றோரின் சம்மதத்தை பெற்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேற்கொண்டு விவரங்களை அப்போது தெரிவிக்க மறுத்துவிட்டார்.”

சமீபமாக அவரது படங்கள் தோல்வியைத் தழுவி வந்தன. ஜோதிடரும், குடும்பத்தினரும் திருமணம் செய்து வைத்தால் படங்கள் வெற்றி பெற வாய்ப்பிருக்கு எனக் கூற திருமண நிச்சயத்தை அதிரடியாக அரங்கேற்றம் செய்துள்ளனர்..

பார்ப்போம் நாரதரில் வெற்றி ராசி ஒர்க் அவுட் ஆகுமாவென.