சிபியுடன் இணைந்து மீனுக்கு வைத்தியம் பார்க்கும் நலன் குமாரசாமி..!


சிபியுடன் இணைந்து மீனுக்கு வைத்தியம் பார்க்கும் நலன் குமாரசாமி..!

நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிபிராஜ் காட்டில் வாய்ப்பு மழை கொட்டுகிறது.

இதனையடுத்து, இயக்குனர் அறிவழகனிடம் அசோஸியட் இயக்குனராக பணிபுரிந்த மணி செய்யோன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

முழுக்க முழுக்க காமெடியை நம்பி இப்படக்குழு இறங்கியிருக்கிறது.

இப்படத்தில் முக்கிய வேடத்தில், சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் நலன் குமாரசாமியும் நடிக்கிறார்.

இவர் இப்படத்தில் மீனுக்கே மருத்துவம் பார்க்கும் வைத்தியராக நடிக்கிறார். இப்படத்தில் மீன் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் ஐஸ்வர்யா, காளி வெங்கட், யோகி பாபு, லிவிங்ஸ்டன், மைம் கோபி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கிறதாம்.