“இந்தியாவின் நிலைமை வெட்கமாக இருக்கிறது…’ – நாசர் வேதனை.!


“இந்தியாவின் நிலைமை வெட்கமாக இருக்கிறது…’ – நாசர் வேதனை.!

அருந்ததி மற்றும் அறிமுக நாயகன் ராம் நடித்துள்ள படம் அர்த்தநாரி. கிருத்திகா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சுந்தர இளங்கோவன் இயக்கியுள்ளார். இதில் நாசர், நடன இயக்குனர் சிவசங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், எஸ்ஆர்எம் நிறுவனரும், ஐஜேகே கட்சியின் தலைவருமான பாரி வேந்தர், தயாரிப்பாளர் கோவை தம்பி, நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நாசர் பேசியதாவது…

திரையுலகில் உள்ள பல துறையினரும் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இலவச மருத்துவ உதவிகளை பெற்று வருகின்றனர். இதை செய்துவரும் பாரிவேந்தர் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அர்த்தநாரி படம் ஒரு அருமையான கதைக்கருவை கொண்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய ஒரு அழுத்தமான கருத்து இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுக்கே சவால் விட்டு ரோல் மாடல் போல இருந்த நாடு நம் இந்தியா. ஆனால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது.

இந்தியாவின் இன்றைய நிலையை நினைத்தால் அவமானமாக, வெட்கமாக இருக்கிறது. இப்படியான நிலைக்கு முக்கிய காரணம் சிறுவர்கள் பள்ளியில் படிக்காமல் வேலை செய்கின்றனர்.

பல நிறுவனங்களும் சிறுவர்களை வேலையில் அமர்த்தியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அப்படியான ஒரு விழிப்புணர்வு அம்சம் இப்படத்தில் கூறப்பட்டுள்ளது” என்றார்.

Related