ஜெயம் ரவியை வாழ்த்திய ‘பூலோகம்’ வில்லன்!


ஜெயம் ரவியை வாழ்த்திய ‘பூலோகம்’ வில்லன்!

ஜெயம் ரவி இவ்வருடம் மட்டும் நான்கு படங்களை கொடுத்தார். இதில் கடந்த 24ஆம் தேதி பூலோகம் படம் வெளியாகி அதுவும் ஹிட்டானது. கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருந்த இப்படத்தில் ஜெயம் ரவி பாக்ஸராக நடித்திருந்தார். இவருடன் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், பொன் வண்ணன், சண்முகநாதன், நாராயணன் மற்றும் ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பாக்ஸிங்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இப்படத்தின் இறுதிகாட்சியில் ஜெயம் ரவி மற்றும் நாதன் ஜோன்ஸ் மோதும் காட்சி படத்தின் ஹைலைட்டாக பேசப்பட்டது. மேலும் படத்தின் வெற்றிக்கு இதுவே பெரிய காரணமாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நாதன் ஜோன்ஸ் பூலோகம் படக்குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது… இயக்குனர் கல்யாண கிருஷ்ணன், ஹீரோ ஜெயம் ரவி, தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள். மேலும் இப்படத்திற்காக கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி.

படம் வெற்றியடைந்து இருப்பதால் சந்தோஷம் அடைகிறேன். நானும் இதில் பங்கேற்று இருந்தேன் என்பதில் பெருமை. வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.