மரணத்தோடு போராடிய ‘ஆடுகளம்’ எடிட்டர் கிஷோர் மரணம்!


மரணத்தோடு போராடிய ‘ஆடுகளம்’ எடிட்டர் கிஷோர் மரணம்!

இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘ஈரம்’ படத்தில் எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர்.  மேலும், ‘ஆடுகளம்’, ‘மாப்பிள்ளை’, ‘உதயம்’, ‘180’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘காஞ்சனா’, ‘பரதேசி’, ‘எதிர்நீச்சல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் சிறந்த படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.

இந்நிலையில் ஒரு நாள் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார் கிஷோர். இவரை இயக்குனர் வெற்றிமாறன்தான் மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தார். மூளையில் ரத்தம் கசிந்து பெருமளவு பரவி விட்டதால் இவர் சுயநினைவை இழந்து விட்டதால் இனி சிகிச்சையளிப்பதில் பலனில்லை என்றே கூறிவிட்டனர் மருத்துவர்கள். இதனை நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம்.

தற்போது கிஷோர் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இவருக்கு இன்னும் மூன்று  மாதத்தில் திருமணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. 36 வயதான இந்த திறமையான இளைஞரின் மரணம் திரையுலகில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.