விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..!


விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..!

புதிய கீதை, உதயா உள்ளிட்ட ஒரு சில படங்கள் விஜய்க்கு கைகொடுக்காத போது, தன் இயக்கத்தின் மூலம் கைகொடுத்தவர் இயக்குனர் பேரரசு.

இவரின் இயக்கத்தில் வெளியான திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய படங்கள் விஜய்க்கு மாஸ் படங்களாக அமைந்தன.

அதன்பின்னர் அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தையும் இயக்கினார்.

கடந்த 2015 ஆண்டு மலையாளத்தில் ஒரு படத்தையும் இயக்கினார்.

தற்போது, வாடா மகனே என்றொரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதவிருக்கிறாராம்.

இப்படத்தை வினோத் குமார் இயக்க, ஒளிப்பதிவாளர் நட்டி என்ற நட்ராஜ் நாயகனாக நடிக்கிறார்.

இவர் விஜய்யின் புலி படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கவிபாரதி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க, கவிஞர் பிறைசூடனின் மகன் கவின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தற்போது படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.