விஜய்சேதுபதியுடன் இணையும் நயன்தாரா & த்ரிஷா!


விஜய்சேதுபதியுடன் இணையும் நயன்தாரா & த்ரிஷா!

‘போடா போடி’ படத்தை தொடர்ந்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்.’ தனுஷ் தயாரித்த இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் பார்த்திபன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், ஆர். ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ், விஜய்சேதுபதி இருவரும் மீண்டும் இணையவுள்ளனர். இப்படம் மலையாளத்தில் பெரும் வெற்றிப்பெற்ற ‘ப்ரேமம்’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் இயக்குனர் விக்னேஷ்சிவனுக்கு அடுத்தபடம் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தை தயாரித்து வரும் ஏ.எம்.ரத்னத்தின் நிறுவனத்தின் அடுத்தபடத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் ஜோடி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் முக்கிய கேரக்டரில் த்ரிஷாவும் இணைவார் என கூறப்படுகிறது. ‘வேதாளம்’ ரிலீசுக்கு பிறகு இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.