மீண்டும் பயமுறுத்த தயாராகிறார் நயன்தாரா…!


மீண்டும் பயமுறுத்த தயாராகிறார் நயன்தாரா…!

இயக்குனர் சற்குணம் தயாரிக்க, நயன்தாரா நடிப்பில் த்ரில்லர் படம் ஒன்று உருவாகவுள்ளது.

இப்படத்தை சற்குணத்தின் உதவியாளர் தாஸ் என்பவர் இயக்கவிருக்கிறார்.

இதில் தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஜெய் நடித்த ‘வடகறி’ மற்றும் ‘புகழ்’ ஆகிய படங்களில் பணியாற்றிய விவேக் சிவா மற்றும் மெர்வின் ஷலோமன் ஆகிய இருவரும் இசையமைக்கவிருக்கின்றனர்.

இதில் ‘புகழ்’ படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.