‘இது நம்ம ஆளு’ சிம்புவுக்காக டப்பிங் பேசிய நயன்தாரா


‘இது நம்ம ஆளு’ சிம்புவுக்காக டப்பிங் பேசிய நயன்தாரா

நிஜகாதலர்களாக இணைந்து வலம் வந்த ஜோடி சிம்பு-நயன்தாரா. பின்பு பிரிந்துவிட்ட நிலையில் மீண்டும் இது நம்ம ஆளு படத்திற்காக மட்டும் (இது நாங்க சொல்லலப்பா… அவிங்களே சொன்னது…) இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சிம்பு தனது சொந்த நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்க அவரது தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், தனக்கான டப்பிங் பணிகளை பேசிக் கொடுத்துள்ளார் நயன்தாரா. பொங்கலுக்கு இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.

இணையத்தில் இவர்கள் இணைந்து உள்ள படங்கள் கலக்கி கொண்டிருக்கும் நிலையில், தங்களுடைய காதல் பிரிவிற்கு பிறகு சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.

இதுவரை, தான் நடித்த எந்த படத்திற்கும் டப்பிங் பேசாத நயன்தாரா, முதன் முறையாக சிம்பு கேட்டதால் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை இவர் நம்ம ஆளுதானே என்று நினைத்து செய்திருப்பாரோ?