சூர்யா வழியில் நயன்தாரா… கைகொடுப்பார்களா ரசிகர்கள்..?


சூர்யா வழியில் நயன்தாரா… கைகொடுப்பார்களா ரசிகர்கள்..?

நயன்தாராவின் கால்ஷீட் நமக்கு கிடைக்காத என நம்மூர் ஹீரோக்கள் முதல் தென்னிந்தியாவின் சூப்பர் ஹீரோக்கள் வரை காத்திருக்க அம்மணியோ தற்போது அதிரடி முடிவில் இறங்கியுள்ளார்.

ஒரு பெண் மற்றும் அவரை சுற்றியுள்ள பெண்கள் பற்றிய ஒரு கதைகளத்தை கொண்டு எடுக்கப்படும் தமிழ்ப்படம் ஒன்றைத் தயாரிக்கவிருக்கிறாராம்.

விரைவில் உருவாகவுள்ள இப்படத்தில் மாவட்ட ஆட்சியராக நடிக்கிறாராம் நயன்தாரா.

ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனர் ஜெகன் இப்படத்தை இயக்குகிறார்.

சூர்யா தன் மனைவி ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே படத்தை தயாரித்தார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே அமோக ஆதரவு பெற்றது.

ஒரு தயாரிப்பாளராக சூர்யாவுக்கு அப்படம் கைகொடுத்தது. அதுபோல் நயன்தாராவுக்கு ரசிகர்கள் கைகொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.