விஜய்சேதுபதிக்கு 2C… சிவகார்த்திகேயனுக்கு 3C… நயன்தாரா முடிவு…!


விஜய்சேதுபதிக்கு 2C… சிவகார்த்திகேயனுக்கு 3C… நயன்தாரா முடிவு…!

‘ரெமோ’ படத்திற்காக கீர்த்தியுடன் இணைந்து டூயட் பாடி வருகிறார் சிவகார்த்திகேயன். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிருத் இசையமைக்க 24AM ஸ்டுயோஸ் நிறுவனம் சார்பாக ஆர் டி ராஜா தயாரிக்கிறார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதுப்படத்தையும் ஆர் டி ராஜாவே தயாரிக்கிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்ட செய்தியை நம் தளத்தில் படித்தீர்கள் அல்லவா?

இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிற்கு ரூ. 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதியுடன் நடித்த நானும் ரவுடிதான் படத்திற்கு ரூ 2 கோடி சம்பளம் வாங்கினார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.