ஜல்லிக்கட்டு ஓகே…ஜாக்பாட்டை மிஸ் பண்ணிட்டீங்களே “தர்மதுரை”?


ஜல்லிக்கட்டு ஓகே…ஜாக்பாட்டை மிஸ் பண்ணிட்டீங்களே “தர்மதுரை”?

‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி குருதட்சணையாக இயக்குனர் சீனுராமசாமியுடன் மூன்றாவது முறை இணைகிறார். ரஜினி ஆசையில் ‘தர்மதுரை’ பெயரை தூக்கியிருக்கிறார்கள்.

  தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவதா நாயர் இப்படி நாலு ஹீரோயின்  இருந்தும் நயன்தாராவும் வேண்டுமாம்.

இந்தப் படத்தில் உள்ள ஒரு ஐட்டம் பாட்டுக்கு  நயன்தாராவை கேட்டிருக்கிறார்கள். அம்மணி போன பட ஹீரோவாச்சேன்னு அமைதி காக்க இடைவெளியில் பப்ளிசிட்டி பார்த்திருக்கிறார்கள் தர்மதுரைகள்.

இது சரிப்பட்டு வராது என போனை போட்டு நான் ஆடவில்லை. பப்ளிசிட்டி பண்றதை நிறுத்திக்கோங்க என்றிருக்கிறார் நயன். வேறு வேட்டைக்கு தாவியிருக்கிறது டீம்.

இந்தக் கூட்டணியில் மீண்டும் விஜய்சேதுபதியின் அம்மாவாக  இணைகிறார் ராதிகா சரத்குமார்.

சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு பற்றிய காட்சிகளை இப்படத்தில் வைக்கவிருக்கிறாராம் இயக்குனர்.

ஜல்லிக்கட்டை வச்சி என்ன பண்ண?? ஜாக்பாட்டை விட்டுட்டீங்களே பிரதர்.