சிவகார்த்திகேயனுடன் நடிக்க நயன்தாரா மறு​ப்பு​?


சிவகார்த்திகேயனுடன் நடிக்க நயன்தாரா மறு​ப்பு​?

இந்தாண்டின் முதல் வெற்றியை கொடுத்த சந்தோஷத்தில் இருக்கிறார் ரஜினிமுருகன் ஹீரோ சிவகார்த்திகேயன். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கீர்த்தியுடன் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியாகிறது.

இப்படத்தை தொடர்ந்து தனி ஒருவன் ராஜா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவா. இப்படத்தின் நாயகி வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளனர். ஆனால் தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க முடியாது. அடுத்த படத்தில் பார்க்கலாம் என்று கூறியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இதுவரை உறுதியாகவில்லை என்றாலும் விக்னேஷ் சிவன் இயக்கக்கூடும் என்று செய்திகள் ​உலா வருகிறது.