நயன்தாரா ‘காட்டும்’ பாரபட்சம்!


நயன்தாரா ‘காட்டும்’ பாரபட்சம்!

இன்றைய தமிழ் திரையுலகின் முன்னணி நாயகி யார் என்று கேட்டால் அனைவரும் சொல்லும் பதில் வேறு யார்? நயன்தாராதான். அண்மையில் இவரது நடிப்பில் ‘நண்பேன்டா’ படம் வெளியாகியுள்ளது. படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படத்தில் நயன்தாராவின் அழகும் நடிப்பும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறதே என்கின்றனர்.

தற்போது, ‘மாஸ்’, ‘நானும் ரவுடிதான்’, ‘மாயா’, ‘இது நம்ம ஆளு’, ’தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் நயன்தாரா தன் தாய்மொழி மலையாளத்தை விட்டு வைப்பாரா? அங்கும் தனது கலைச்சேவையை தொடர்ந்து வருகிறார். தற்போது மலையாளத்தில் மம்மூட்டியுடன் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக ரூ 50 லட்சத்தை மட்டும்தான் சம்பளமாக வாங்கியுள்ளராம் நயன்தாரா. ஆனால் இவரது தமிழில் இவரது சம்பளம் 2 கோடிகளை தாண்டும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தமிழ் மொழிக்கும் தாய் மொழிக்கும் ஏன் இந்த பாரபட்சம் காட்டுகிறார் நயன்தாரா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு நயன்தாராவின் விளக்கம் இதுதானாம்.

“தமிழ் சினிமாவின் வியாபாரம் உலகம் முழுக்க பரவியுள்ளது. ஆனால் மலையாள திரைப்படங்களுக்கு அப்படியில்லை. மலையாள படங்களின் வியாபாரம் அறிந்துதான் சம்பளத்தை குறைத்தேன்” என்கிறார்.

ஏனுங்க… அம்மணி சொல்றதுதான் சரிதானுங்களே…