விக்ரமின் ‘இருமுகன்’ தகவல்கள்… சூட்டிங்கை நிறுத்திய நயன்தாரா..?


விக்ரமின் ‘இருமுகன்’ தகவல்கள்… சூட்டிங்கை நிறுத்திய நயன்தாரா..?

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இவருடன் நயன்தாரா, நித்யா மேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்கேடி பிலிம்ஸ் சார்பாக ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.

மலேசியாவில் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதனிடையில் நயன்தாராவுக்கு பேசிய சம்பளம் தரப்படவில்லை என்பதால், நயன்தாரா சூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை எனவும், அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

இதுகுறித்து கேட்டதற்கு… ”அதில் சிறிதளவும் உண்மையில்லை. படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்