ஹன்சிகாவை தொடர்ந்து நயன்தாராவுடன் இணையும் சுந்தர் சி!


ஹன்சிகாவை தொடர்ந்து நயன்தாராவுடன் இணையும் சுந்தர் சி!

தனது முதல் படமான ‘முறை மாமனில்’ மனைவி குஷ்பூவை இயக்கியவர் சுந்தர் சி. இப்படம் இயக்கும்போது இவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்றாலும் இவர்களிடையே நெருக்கம் இருந்தது.

அதன்பின்னர், கடந்த 20 வருடங்களில் மீனா, ரோஜா, ரம்பா, சௌந்தர்யா, அனுஷ்கா, அஞ்சலி உள்ளிட்ட பிரபல நாயகிகளை இயக்கியுள்ளார்.

இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்களில் ஹன்சிகா தவறாமல் இடம் பெற்று வருகிறார். தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள ‘அரண்மனை 2’ படத்தில் த்ரிஷாவுடன் ஹன்சிகாவும் இடம்பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கவுள்ள ‘கலகலப்பு 2’ படத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. அவ்னி சினி கிரியேஷன்ஸ் சார்பாக குஷ்பு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.