கமல்ஹாசனுடன் இணைந்த நயன்தாரா.!


கமல்ஹாசனுடன் இணைந்த நயன்தாரா.!

தமிழில் அறிமுகம் ஆகும் காலக்கட்டத்திலேயே ரஜினியுடன் நடித்தவர் நயன்தாரா. இதனைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடன் நடித்தும் விட்டார்.

தற்போதுதான் விக்ரமுடன் இருமுகன், சிவகார்த்திகேயனுடன் ஒரு புதிய படம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். ஆனால் இதுவரை கமலுடன் நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது கமல் படத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு புதிய படத்தில் இணைந்து இருக்கிறார்.

இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவரது உதவியாளர் தாஸ் இயக்கும் திகில் படம் ஒன்றில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ‘டிக் டிக் டிக்’ என்ற பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பெயரில் கடந்த 1981ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related