நயன்தாராவின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? ‘ஐ’ விக்ரம்தான்!


நயன்தாராவின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? ‘ஐ’ விக்ரம்தான்!

ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ‘ஐ’. இந்தப் படத்திற்கு பிறகு ‘கோலிசோடா’ விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார் என்பது தாங்கள் அறிந்ததே. படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

இறுதிகட்டப் படப்பிடிப்பை சிக்கிம் மாநிலத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு பிறகு  படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர் தயாரிப்பு நிறுவனத்தினர்.

இதனையடுத்து, விக்ரம் அடுத்ததாக ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் அல்லது கௌதம்மேனனின் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆனந்த் சர்மா இயக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வராததால்,  இதுபற்றிய முறையான அறிவிப்பு வெளிவரவில்லை.

நயன்தாரா தற்போது, ‘மாஸ்’, ‘நானும் ரவுடிதான்’, ‘மாயா’, ‘நண்பேண்டா’, ‘இது நம்ம ஆளு’ உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.