“நாகசைதன்யாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் தப்பவில்லை!”- கலாய்க்கும் “நெட்”வாசிகள்


“நாகசைதன்யாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் தப்பவில்லை!”- கலாய்க்கும் “நெட்”வாசிகள்

ரீமேக் என்றாலே அந்த படத்தையும் இந்த படத்தையும், நடிப்பவர்களின் நடிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுவது மக்களின் இயல்பு.

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ப்ரேமம் படம் தெலுங்கில் ரீமேக் ஆகவிருக்கிறது. இதில் நிவின் பாலி கேரக்டரில் நாக சைதன்யா நடிக்கிறார் என்றதுமே ரசிகர்கள் அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது இப்படத்தின் முக்கிய கேரக்டரான மலர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்றதுமே ரசிகர்கள் கொஞ்சம் ஓவராய்த்தான் கலாய்க்கிறார்கள்.

மலர் கேரக்டரில் ஸ்ருதியின் படத்தை பார்த்தவுடன் இவரா மலர்? இது அந்த மலருக்கே வந்த சோதனை என வெறுப்பேற்றி சில மீம்ஸ்களை க்ரியேட் செய்து நெட்டில் உலா விட்டுள்ளனர்.

காஸ்டிங் முக்கியமப்பா!